மம்தாவை மண்ணை கவ்வ வைக்க அமித்ஷா பிளான்..!! 200 தொகுதிகளை கைப்பற்ற அதிரடி திட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 7, 2020, 12:33 PM IST
Highlights

கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டு மக்கள் மம்தா பானர்ஜியை நம்பினார்கள். ஆனால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் பாஜகவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துள்ளோம். 

பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால் மேற்குவங்க மாநிலத்தை  தங்கமாக மாற்றுவோம் என உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியுள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சார சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அங்கு போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை, மண்ணை கவ்வியது.  ஆனால் அடுத்த மூன்றே ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை அதிரடியாக கைப்பற்றி  மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பாஜக. 

இந்நிலையில் அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அங்குள்ள மொத்தம் 294 சட்டமன்ற தொகுதிகளில் 200 தொகுதிகளை கைப்பற்றுவது என்ற முடிவோடு பாஜக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா மேற்கு வங்கத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  ஆகிய கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் மக்கள் வங்க மக்கள் வாய்ப்பு அளித்தீர்கள் அதுபோல பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அப்படி நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் வங்கத்தை தங்கமாக மாற்றுவோம். மேற்கு வங்க மாநிலத்தில் எல்லையில் நடக்கும் ஊடுருவல்களை தடுத்து பாதுகாப்பானதாக மாற்றுவோம். 

கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டு மக்கள் மம்தா பானர்ஜியை நம்பினார்கள். ஆனால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் பாஜகவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துள்ளோம். அதேபோல் நம்பி வாக்களித்த மம்தா பானர்ஜி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளம், குரானா போன்றவற்றை பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் நிவாரணம் என்ற பெயரில் ஊழல் செய்துள்ளது. ஆனால் அதை நினைத்து மம்தா பானர்ஜி கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. மொத்தத்தில் அவர் வாக்கு அரசியலை மையமாகக் கொண்டு செயல்படுகிறார். அதன் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 100 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மொத்தத்தில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மம்தா பானர்ஜி முடக்கி  வைத்துள்ளார் என அமித்ஷா சரமாரியாக குற்றம் சாட்டினார்.

 

click me!