"இட் இஸ் மெடிக்கல் மிராக்கல்"... கருணாநிதி பற்றி வைகோ உற்சாகம்..!

 
Published : Jul 30, 2018, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
"இட் இஸ் மெடிக்கல் மிராக்கல்"... கருணாநிதி பற்றி வைகோ உற்சாகம்..!

சுருக்கம்

it is medical mirracle said vaiko

"இட் இஸ் மெடிக்கல் மிராக்கல்"... கருணாநிதி பற்றி வைகோ உற்சாகம்..!

திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது என தகவல்  வெளியானதும் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

நேற்று மாலை முதல் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து வந்தனர். கலைஞரின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பாட்டு பின்பு அதனை சரி செய்யப்பட்டு தற்போது  சீராக உள்ளது என நேற்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

மாநில கட்சி தலைவர்கள் முதல் தேசிய கட்சி தலைவர்கள் வரை அனைவரும் காவேரி  மருதுவமனைக்கு நேரில் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் மாநிலங்களவை எம்பி கனிமொழியிடம் நலன் விசாரித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை  குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் என பட்டியல் நீள்கிறது

இந்நிலையில் கலைஞரின் உடல் நலம் விசாரித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "கலைஞர் தன்னுடைய அரசியல் வாழ்கையில் துரோகிகளிடமும் எதிரிகளிடமும் போராடி வந்தார்.

இப்போது எமனிடம் போராடி வருகிறார்...இதனையும் வென்று மீண்டு வருவார்...இட் இஸ் தி மெடிக்கல் மிராக்கள் என கூறி உள்ளார் வைகோ.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு