ராமதாஸை அந்தமானுக்கு கடத்துவது நல்லது... பிரபல எழுத்தாளார் ஆவேசம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 27, 2021, 1:43 PM IST
Highlights

அந்தமானில் இருந்து ஆள்பிடித்து வருவதைவிட நல்ல விஷயம் கட்சியினையும் தன் குடும்பத்தையும் அந்தமானுக்கு கடத்துவது, அது மிகபெரிய நல்ல காரியமாக இருக்கும் ராமதாசர் அதை பரிசீலிப்பது நல்லது.

கட்சியினையும் தன் குடும்பத்தையும் அந்தமானுக்கு கடத்துவது, அது மிகபெரிய நல்ல காரியமாக இருக்கும். ராமதாஸ் அதை பரிசீலிப்பது நல்லது என எழுத்தாளார் ஸ்டேன்லி ராஜன் தெரிவித்துள்ளார்.

பாமக ராமதாஸருக்கு இப்பொழுது என்னாயிற்றோ தெரியவில்லை நிதானம் இழந்திருக்கின்றார், சட்டசபை தேர்தல் தோல்வி, பாமகவினர் பாஜகவுக்கு சென்றது என மனிதர் அப்செட். இதற்காக மத்திய அரசை அவர் எதிர்க்கமுடியாது காரணன் அன்புமணிமேல் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன‌. இந்நிலையில் சில உள்ளாட்சி இடங்களில் அவர்கள் கட்சிக்கு ஆள் கிடைக்கவில்லை எனும் தகவல் அவரை மிக டென்சனாக்கிவிட்டது. இதனால் கட்சிகாரர்களை கடுமையாக திட்ட ஆரம்பித்துவிட்டார். 

 "வன்னிய பரம்பரையென்ன, வீரமென்ன , காட்சியென்ன, வரலாறென்ன.." என்றெல்லம் சீறிவிட்டு கொஞ்சம் ஆசுவாசபடுத்திகொண்டார்.
பின் இப்படியெல்லாம் கட்சிபணி செய்யாமல் இருந்தால் அந்தமானில் இருந்து ஆள்பிடித்துவருவேன் என மிரட்டியவர் தன் வழக்கமான வாக்கியத்தையும் சொல்ல தவறவில்லை. ஆம், இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனும் வரி அது, அதையும் சொல்லிவிட்டார்.

இந்த முழக்கத்தை ஒவ்வொரு தேர்தலுக்கு பின்பும் சொல்வார், தேர்தல் நெருங்கும்பொழுது இதை மறந்துவிட்டு ஒரு கூட்டணியில் ஒட்டிகொள்வார், அவரை போல் தொண்டர்களும் அந்த உறுதிமொழியினை மறப்பார்கள் "அய்யோ நாம் தான் உறுதிமொழியினை மறந்துவிட்டோம், தொண்டர்களுமா மறப்பார்கள்?" என திகைக்கும் ராமதாசர் பின் தேர்தல் முடிந்ததும் அதை நினைவுபடுத்துவார். அப்படி இப்பொழுதும் செய்துவிட்டார். அவர் அந்தமானில் இருந்து ஆள்பிடித்து வருவதைவிட நல்ல விஷயம் கட்சியினையும் தன் குடும்பத்தையும் அந்தமானுக்கு கடத்துவது, அது மிகபெரிய நல்ல காரியமாக இருக்கும் ராமதாசர் அதை பரிசீலிப்பது நல்லது.

பொதுவாக ராமதாஸ் அவர்கள் அரசியலில் காற்று எந்த பக்கம் வீசுகிறது என்று சரியாக கணித்து திமுக அதிமுக என்று கூட்டணி வைத்து வெற்றி பெற்று விடுவார் என்ற எண்ணம் முன்பு பலருக்கு உண்டு. அதற்கு ஏற்ப பாமக தேர்தல்களில் கணிசமான வெற்றியும் பெற்று வந்தது. அந்த கட்சியின் பலம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உள்ள ஓட்டு வங்கி தான் மகன் அன்புமணி வந்தார். அவர் மாநில முதல்வர் ஆக ஆசை பட்டார். மகன் பாசம் ராமதாஸ் கண்ணை மறைத்தது.

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று செலவு செய்து பிரச்சாரம் செய்து உள்ளதும் போனது தான் மிச்சம் பிறகு இருக்கும் சமுதாய ஒட்டுக்களை யாவது தக்க வைத்துக் கொள்வோம் என்ற வெறியோடு களம் இறங்கினார் மருத்துவர். கால மாற்றத்தில் அவர் மீது சமுதாய மக்களுக்கு இருந்த பிடிப்பும் கரைய ஆரம்பித்து விட்டது. சித்திர குள்ளன் சூர்யா கூட நக்கலாக பதில் அறிக்கை விடும் நிலை வந்து விட்டது.

இப்போதும் அன்புமணிக்கு எல்லா தகுதியும் உள்ளது. அவர் முதல்வர் ஆக திண்ணை பிரச்சாரம் செய்யுங்கள் என்று வரிக்கு வரி தன் மகனை முதல்வர் ஆக்க சமுதாயம் உழைக்க வேண்டும் என்று கோபமாக பேசுகிறார். கட்சிக்கு என்று சொன்னால் கூட கொஞ்சம் ஆதரவு கூடலாம். இவர் மகன் வளர ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் வந்து விட்டது. வலுவிழந்த அதிமுக விடன் சேர்ந்து பலன் இருக்காது.

திமுக சேர்க்க விரும்பவில்லை. தனித்து நின்றால் காசு போய் பலன் பூஜ்யம் ஆகும். என்னதான் செய்வார் மருத்துவர்? அன்பு மகனை அரியணையில் அமர்த்தும் ஆசை வாழ் நாளில் நிறைவேறாது போலிருக்கே பாசம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது இது போல் பேச ஆரம்பித்து விட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!