காலா படத்தில் போராட்டவாதியாக நடித்திருக்கிறாரே... இது இரட்டை வேடமில்லையா?

First Published Jun 8, 2018, 10:02 AM IST
Highlights
It is a double voice to be seen in the movie Kaala


ரஜினி எதற்கெடுத்தாலும் போராட்டம் கூடாது. அதிலும் சமூக விரோத வன்முறை போராட்டங்கள் கூடவே கூடாது என்று ஆவேசமாக கூறிவிட்டு, காலா படத்தில் போராட்டவாதியாக நடித்திருக்கிறாரே ..இது இரட்டை வேடமில்லையா? என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

முதலில்...இது 1960-1970 கள் அல்ல. அந்த அரதப் பழைய கருப்பு-வெள்ளை & ஈஸ்ட்மன் கலர் படங்களின் காலத்தில்.. தி.மு.க வின் அரசியலுக்கு எம். ஜி.ஆர். தன் படங்களை, திரைப்பட நாயகன் என்கிற பிரபல்யத்தை தொடர்ந்து பயன்படுத்தினார். அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் அக் கட்சியின் வளர்ச்சிக்கான பிரச்சார பீரங்கி ! அதன் பிறகு, அதை ஒட்டியே ..அவர் தனிக்கட்சி அரசியலுக்கும் வந்தார்.

ரஜினியின் திரையுலக காலத்திற்கு வருவோம். இவர் நடித்த படங்கள் முழுமையான mass entertainer வகை திரைப்படங்கள் மட்டுமே. எந்த ஒரு குறிப்பிட்ட அரசியலுக்குமான பிரச்சார பீரங்கியாக இவருடைய படங்கள் இருந்ததில்லை. உழைக்கும் மக்களை மையமாக வைத்த, அவர்களில் ஒருவனை கதாநாயகனாக கொண்ட மேலோட்டமான entertainers மட்டுமே. இப் படங்களில்.. அரசியல் preachings-ம் அரசியல் sermons-ம் இருந்ததில்லை. அவருடைய படங்களில் அவருடைய நடிப்பு போராட்டங்களும் கற்பனை திரைப் படங்களோடு நின்றுவிடுகிற fantasy மட்டுமே.

1960-70 களை சேர்ந்தவர்கள்..எம்.ஜி.ஆர். ன் பிரச்சார பீரங்கி வகை அரசியல் படங்களுக்கும், ரஜினியின் mass entertainer வகை படங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதது போல பேசிக் கொண்டிருப்பது.. பொருளற்ற ரஜினி எதிர்ப்பு அரசியல் மட்டுமே.

அடுத்து..பாட்ஷாவில்.. ரஜினி Underworld Don-ஆக நடித்தார். அதனால், நிஜத்திலும் அவர் Underworld Don தான் என்று கைது செய்ய சொல்லி போராடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு ஆட்சிக்கு வரத் துடிக்கும் கட்சிகளை ரஜினி பயம் உலுக்குகிறது.

தமிழகத்தின் இந்த அரசியல் பாசிச களேபரத்தில்... பிள்ளையார் சுழி போன்ற 'மோடி ஒழிக' விற்கு கொஞ்சம் break கிடைத்திருக்கிறது. :)

எது எப்படியோ..தமிழ் நாட்டிற்கு ஆதரவாக... காவிரி நீர் பங்கீடு குறித்து உறுதியாக கருத்து தெரிவித்து, அதனால்.. கர்நாடக ஆளும் அரசியலிடமும், சில கன்னட அமைப்புகளிடமும் எதிர்ப்பை சந்திக்கிற ரஜினிக்கு.. தமிழக மக்களின் தார்மீக ஆதரவு உண்டு. இப்படி அந்த பதிவில் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.

click me!