பெண்களுக்கான உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என தெரியுமா.?முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Feb 19, 2023, 1:58 PM IST
Highlights

திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதி

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது, அதில் குறிப்பாக பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றியது, இருந்த போதும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் வகையில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து 22 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை மகளிர் உரிமை தொகைக்கான அறிவிப்பு செயல்படுத்தப்படாதது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. 

கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து கொண்டிருந்திருப்பார் - ஆ.ராசா அதிரடி

முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்

இந்தநிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், திமுக தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். நாங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என கூறவில்லை. கொரோனாவை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தோம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 6 இலட்சம் கோடி கடன் இருப்பது எங்களுக்கு தெரியாது. ஆனாலும் உரிமை தொகை தருகிறோம் என தெரிவித்துள்ளோம்.  நாளை ஈரோடு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அதிமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு.?

தேர்தல் வாக்குறுதி அளித்த அனைத்தையும் தருவோம். உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் தருகிறோம் என கூறினோம். 6 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது என எங்களுக்கு தெரியாது.  2 ஆண்டு காலம் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என  எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த போது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு செல்போன் தருகிறோம் என ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி அதிமுக நிறைவேற்றவில்லையென கூறினார்  இன்னும் 3 ஆண்டு காலம் திமுக ஆட்சி உள்ளது. எனவே கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.   

இதையும் படியுங்கள்

மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி நீக்கம்.! காரணம் என்ன தெரியுமா.?

click me!