''பணப்பட்டுவாடா ஆவணமும் தீராத சந்தேகமும்'' அமைச்சர் விஜயபாஸ்கர் கீதாலட்சுமிக்கு மீண்டும் சம்மன்...

 
Published : Apr 14, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
''பணப்பட்டுவாடா ஆவணமும் தீராத சந்தேகமும்'' அமைச்சர் விஜயபாஸ்கர் கீதாலட்சுமிக்கு மீண்டும் சம்மன்...

சுருக்கம்

IT Deportment send inquiry notice send to vijayabaskar

அமைச்சர் விஜயபாஸ்கர், டாகடர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். 

கடந்த 7 ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாகடர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அந்த சோதனையில் பல்வேறு முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த அதிரடி சோதனையில் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ. 89 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணமும் கைப்பற்றப்பட்டது.

அதனை அடுத்து 10-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து விஜயபாஸ்கர் கடந்த 7 ம் தேதியும், கீதாலட்சுமி கடந்த 13ம் தேதியும் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக,

மேலும் சந்தேகங்கள் இருப்பதாகவும், அதனால் வரும் திங்கட்கிழமை விசாரனைக்கு மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க திங்கட்கிழமை நேரில் ஆஜராகுமாறு வேண்டும் என்றும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!