
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். இன்றுடன் 32 ஆவது நாள் போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய முறையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகிறது.
விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
நேற்று குட்டிக்கரணம் அடித்து போராடி வந்த விவசாயிகள் இன்று புடவை கட்டி நடு ரோட்டில் அமர்ந்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், விபரீத முறையிலான போராட்டங்கள் நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் .
மாநில அரசும் மத்திய அரசும் தங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததனால் உச்சக்கட்ட போராட்டமாக கழுத்தறுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர் .
டெல்லியில் விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார்