
வருமானவரி துறையின் அதிரடி சோதனை மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரை பயன்படுத்தி, பாஜக வுக்கு எதிராக அரசியல் செய்ய, தினகரன் திட்டமிட்டுள்ளதால் அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனையின் அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சோதனையின் பொது, விஜயபாஸ்கர் வீட்டில் அத்து மீறி நுழைந்த அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், அதிகாரிகளை மிரட்டியதாக, வருமான வரித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த அமைச்சர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அவர்கள், அதை எப்படி சமாளிப்பது? என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவற்றுக்கு காரணமான பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய இதுவே சரியான தருணம், அமைச்சர்கள் கைதாகட்டும் என்று தினகரன் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
தினகரனின் ஆதரவாளரான சக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவி செய்யப்போன தாங்கள், போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டுள்ளோம்.
மேலும் அமைச்சர்கள் கைதானால்தான், பாஜகவுக்கு எதிராக வலுவாக அரசியல் காரணங்களை அடுக்க முடியும் என்றும் தினகரன் கூறி வருகிறாராம்.
வருமான வரித்துறை புகாரின் அடிப்படையில், இதுவரை வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், முன் ஜாமீன் பெறமுடியாமல் அமைச்சர்கள் கடும் தவிப்பில் உள்ளனர்.