விபி.துரைச்சாமிக்கு ஆளுநர் பதவியா? அமித்ஷா கொடுக்கப்போகும் அடுத்த ஷாக்.! அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

By T BalamurukanFirst Published May 27, 2020, 8:49 AM IST
Highlights

திமுகவில் இருந்து பாஜகவுக்கு மனம் தாவிய விபி துரைசாமிக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் திமுகவை கூடுதலாகவே டென்சனாக்கி இருக்கிறது.
 

திமுகவில் இருந்து பாஜகவுக்கு மனம் தாவிய விபி துரைசாமிக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் திமுகவை கூடுதலாகவே டென்சனாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் தாமரையை மலர வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது பாஜக அதற்கான காய் நகர்த்தல்கள் தமிழகத்தில் கொரோனா நேரத்திலும் ஒவ்வொன்றாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாஜக தன்னுடைய அரசியல் சதுரங்க ஆட்டத்தை தமிழகத்தில் ஆடத் தொடங்கி இருக்கிறது.
 
விபி துரைசாமியின் இந்த ஜம்ப்பை திமுகவே எதிர்பார்க்கவில்லை. அவர் அதிருப்தியில் இருக்கிறார் என்று திமுக தலைமைக்கு முன்பே தெரியும்.மாற்றுக்கட்சிக்கு செல்லமாட்டார்.அப்படியே சென்றாலும் அவரால் கட்சிக்கு இழப்பு இல்லை என்றே நினைத்தது திமுக தலைமை.

பாஜக தலைவர் முருகனை..." விபி.துரைச்சாமி சந்தித்ததற்கு காரணம் இருக்கிறது. இந்த சந்திப்புக்கும் முன்பே உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் துரைச்சாமியை பேச வைத்து இவரின் மனக்குமுறலை அவர் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அமித்ஷா..'நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு சரியான பதவி கொடுக்கப்படும். ஊரடங்கு ஒடுங்கட்டும் நீங்கள் டெல்லி வந்து திரும்பும் போது முதல்வரே வந்து வரவேற்பார் என்றெல்லாம் சொல்லியதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கேள்விப்பட்ட ஸ்டாலின் அவசர அவசரமாக மா.செ. எம்பிக்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

அதோடு ஸ்டாலினின் அரசியலுக்கு கடிவாளம் போட, விபி துரைசாமியை ஆளுநராக்கி ஷாக் தர அமித்ஷா முடிவு செய்துள்ளாராம். இதையும் தமது உறுதியாக விபி துரைசாமிக்கு அமித்ஷா அளித்துள்ளாராம்.அநேகமாக கர்நாடக மாநில ஆளுநர் பதவி இவருக்கு கொடுக்கப்படலாம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.இதனால் கடுப்பாகி போனவர்  'கட்சியில் உள்ள தமது அதிருப்தியாளர்கள் யார் என்ற கணக்கிட்டு அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை துவங்குமாறு 2ம் கட்ட தலைவர்களுக்கு ரகசியமாக உத்தரவிட்டு உள்ளாராம்' ஸ்டாலின். 

click me!