ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா ஊரடங்கு நிவாரண நிதி.. ரூ.10,000 வழங்க காங்கிரஸ் ஆன்லைன் பிரச்சாரம்!

By Asianet TamilFirst Published May 27, 2020, 8:44 AM IST
Highlights

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவித்த நாள் முதல் காங்கிரஸ் கட்சி, 13 கோடி ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா ரூ.7,500-ஐ வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனக் கோரிவருகிறது. இதுதொடர்பாக அரசுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் பல வழிகளில் கூறிபார்த்துவிட்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் யோசனையை ஏற்காத பாஜக அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான மீட்பு உதவி தொகுப்பை அறிவித்தார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் 10 ஆயிரம் ரூபாயை கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரச்சாரம் மேற்கொள்கிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவித்த நாள் முதல் காங்கிரஸ் கட்சி, 13 கோடி ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா ரூ.7,500-ஐ வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனக் கோரிவருகிறது. இதுதொடர்பாக அரசுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் பல வழிகளில் கூறிபார்த்துவிட்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் யோசனையை ஏற்காத பாஜக அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான மீட்பு உதவி தொகுப்பை அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்புகளை நிர்மலா சீத்தாராமன் 5 கட்டங்களாக வெளியிட்டா.
இந்நிலையில் 20 லட்சம் கோடி என்பது கடன் அளிப்பதைப் பற்றி மட்டுமே பேசுவதாகவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக கைகளில் நிவாரணம் எதையும் பாஜக அரசு வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் பாதிப்பு அடைந்துள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எழுப்புவதற்கு நாடு முழுவதும் நாளை (28ம் தேதி) ஆன்லைன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது காங்கிரஸ் கட்சி.
வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள எல்லா குடும்பத்துக்கும் ஊரடங்கு நிவாரண நிதியாக 10 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதோடு மோடி அரசு அறிவித்த 20 லட்சம் கோடி தொகுப்பின் உண்மைத்தன்மை என்ன என்பது பற்றியும் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க உள்ளது.

click me!