அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை அமெரிக்க தேர்தல் விளம்பரமாக இருக்க போகிறதா? காங்கிரஸ் கட்சி மோடிக்கு எச்சரிக்கை!

By Thiraviaraj RMFirst Published Feb 22, 2020, 8:25 AM IST
Highlights

இந்தியாவில் அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் இடையே ஆமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் சிறப்பு பொதுக்கூட்டம்  ஒன்றிலும் ட்ரம்ப் உரையாற்றுகிறார். டிரம்பின் இந்த வருகையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், வெறும் புகைப்படம் எடுக்கும் நிகழ்வாக மட்டும் நடத்தக்கூடாது என்றும் காங்கிரஸ்,மோடியை எச்சரித்துள்ளது.

T.Balamurukan

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ஆனந்த் சர்மா பேசும் போது 'இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவை காங்கிரஸ் புரிந்து கொள்வதுடன், அதை ஆதரிக்கவும் செய்கிறது. நட்புறவு மற்றும் ராணுவம், பொருளாதாரம், அணுசக்தி, விண்வெளி, விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு விவகாரங்களில் டிரம்பின் இந்திய வருகை இரு நாடுகளுக்கும் முக்கியமானது. இந்த பயணத்தின்போது இறையாண்மை, சுயமரியாதை, தேசிய நலன் ஆகிய மூன்றையும் மனதில் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.மற்றொரு நாட்டு தேர்தலில் நாம் ஒருபோதும் பங்கேற்பதில்லை. ஆனால் அமெரிக்காவில் நடந்த 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் இந்த தவறு நடந்துள்ளது. எனவே பிரதமர் மோடி கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் நீட்சியாக டிரம்பின் வருகை இருக்கக்கூடாது' என்று எச்சரித்துள்ளார்.

click me!