இன்று டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!!

Published : Feb 22, 2020, 07:47 AM ISTUpdated : Feb 22, 2020, 10:17 AM IST
இன்று டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் சிலையை  திறந்து வைக்கிறார்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!!

சுருக்கம்

பட்டிதொட்டி மக்கள் எல்லாம் பத்திரிகை படிக்கவைக்க காரணமாக இருந்தவர் டாக்டர் பா.சிவந்திஆதித்தனார்.இன்று வரைக்கும் தினதந்தி நாளிதழ் போகாத கிராமமோ அதை படிக்காத வாசகர்களோ இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவிற்கு பத்திரிகை மீது காதல் கொண்டவருக்கு இன்று சிலை திறப்பு விழா. இந்த நிகழ்ச்சியில் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிலையை திறந்து வைக்கிறார்கள். 

T.Balamurukan

பட்டிதொட்டி மக்கள் எல்லாம் பத்திரிகை படிக்கவைக்க காரணமாக இருந்தவர் டாக்டர் பா.சிவந்திஆதித்தனார்.இன்று வரைக்கும் தினதந்தி நாளிதழ் போகாத கிராமமோ அதை படிக்காத வாசகர்களோ இருக்க வாய்ப்பு இல்லை. அந்த அளவிற்கு பத்திரிகை மீது காதல் கொண்டவருக்கு இன்று சிலை திறப்பு விழா. இந்த நிகழ்ச்சியில் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிலையை திறந்து வைக்கிறார்கள். 

தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமுதாய மேம்பாட்டு பணிகளுக்கு அவர் செய்துள்ள சேவைகள் ஏராளம். இதற்காக அவர் பல்வேறு பட்டங்கள், விருதுகள், பரிசுகளை பெற்று உள்ளார்.டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 2008-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்த நிலையில், தமிழக அரசு 2017-ம் ஆண்டு, திருச்செந்தூரில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவித்தது. அதாவது, தூத்துக்குடியில் நவம்பர் மாதம் 22-ந் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்' என்று அறிவித்தார்.

இதற்காக, திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி மணிமண்டபம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நடைபெற்ற கோலாகல விழாவில், மணிமண்டபம் கட்டுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின. அதில், பூங்கா, நூலகத்துடன் பார்வையாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்யும் பணிகள் நடைபெற்றன.

மணிமண்டப கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த மாதம்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பேட்டி அளித்த அவர், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் பிப்ரவரி மாதம் 22-ந் தேதி திறக்கப்படும் என்றும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைப்பார் என்றும் அறிவித்தார்.அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் இன்று காலை 10.45 மணிக்கு நடைபெறும் கோலாகல விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.
 

PREV
click me!

Recommended Stories

நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!
சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை