உலகக் கோப்பையில் இந்தியா தோற்க இப்படியொரு காரணமா..? அதிர வைக்கும் சுப்ரமணியன்சுவாமி..!

By Thiraviaraj RMFirst Published Jul 12, 2019, 6:03 PM IST
Highlights

உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு பலரும் பல காரணங்களை கூறி வரும் நிலையில் அதிரடி அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி எவரும் யோசிக்க முடியாத காரணத்தை கூறி உள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு பலரும் பல காரணங்களை கூறி வரும் நிலையில் அதிரடி அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி எவரும் யோசிக்க முடியாத காரணத்தை கூறி உள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  வேதனை அடைந்தனர். தோல்விக்கான காரணங்களை ஓவ்வொருவரும் ஓவ்வொரு விதமாக  கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கிரிக்கெட்டுக்கான ஐ.சி.சி ஏன் லண்டனில் இருக்க வேண்டும்? வெள்ளைக்காரர், கடினமான சீனிவாசனை நீக்கிவிட்டு, எலும்பில்லாத அதிசய இந்தியரை தலைவர் பதவியில் அமர்த்தி உள்ளார்.

Why should ICC for cricket be located in London? The white man got rid of toughy Srinivasan and planted a boneless wonder Indian as Chairman. UK is rain risk Had it not rained India would have won that same day

— Subramanian Swamy (@Swamy39)

 

பிரிட்டனில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மழை பெய்யவில்லை என்றால் அதே நாளில் இந்தியா வென்றிருக்கும்’’ என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஐசிசி தலைவராக இருந்த சீனிவாசன் விலகிய பிறகு சஷாங் மனோகர் நியமிக்கப்பட்டார்.  அவரைத் தான் எலும்பில்லாத அதிசய தலைவர் என பதிவிட்டுள்ளார் சு.சாமி. 
 

click me!