இப்படியொரு அதிர வைக்கும் கேள்வியா..? ஆவேசத்துடன் பொங்கி எழுந்த வைகோ..!

Published : Jul 15, 2019, 12:20 PM IST
இப்படியொரு அதிர வைக்கும் கேள்வியா..? ஆவேசத்துடன் பொங்கி எழுந்த வைகோ..!

சுருக்கம்

தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஏன்? என கேட்பதில் உள்நோக்கம் இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஏன்? என கேட்பதில் உள்நோக்கம்
இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை நீதிமன்றத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் ஆவேசம் அடைந்த வைகோ, ’இப்படி என்னிடம் கேள்வி கேட்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது’ என்றார்.

“மேல்முறையீட்டில் தண்டனை கொடுத்தால் ஏற்பேன். விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதால் ஆயுள் தண்டனை கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்வேன். இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சே தப்பிக்க முடியாது” என்று வைகோ கூறினார்.

தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, எதிர்காலத்தில் தமிழர்கள் எந்த தேர்வையும்
எழுத முடியாத நிலை ஏற்படும் என கவலை தெரிவித்தார். இந்தியாவை உடைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே முடிவு
செய்துவிட்டதாகவும், இதற்காக வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!