மனைவியின் சொந்த ஊரில் வாய் திறப்பாரா விஜயகாந்த்..? பிரேமலதா எடுத்த அதிரடி முடிவு..!

By Thiraviaraj RMFirst Published Jul 15, 2019, 11:52 AM IST
Highlights

’ நீங்கள் பேச வேண்டிய அவசியம் கூட இல்லை. பிரச்சாரத்தில் உங்கள் முகத்தை மட்டும் காட்டினால் போதும்‘ என கேட்டுக் கொண்டார். ஏ.சி.எஸ்.
விஜயகாந்த் தரப்பிலும் பிரச்சாரம் செய்ய வருவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. 

வேலூர் மக்களவை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா
தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலின் போதே ஏ.சி.சண்முகம் விஜயகாந்தை நேரில் சந்தித்து வேலூரில் தனக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்
எனக் கேட்டுக் கொண்டார். காரணம் பிரேமலதா வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அத்தோடு விஜயகாந்துக்கு வேலூரில் கணிசமான
ரசிகர்கள் உள்ளனர்.  அதனை மனதில் வைத்தே ஏ.சி.சண்முகம் விஜயகாந்தை அழைத்திடுந்தார். ஆனால் அங்கு தேர்தல்
நிறுத்தப்பட்டது. அடுத்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்டோடு விஜயகாந்தை நேரில் சந்தித்த ஏ.சி.சண்முகம், ‘’ நீங்கள் பேச
வேண்டிய அவசியம் கூட இல்லை. பிரச்சாரத்தில் உங்கள் முகத்தை மட்டும் காட்டினால் போதும்‘ என கேட்டுக் கொண்டார். ஏ.சி.எஸ்.
விஜயகாந்த் தரப்பிலும் பிரச்சாரம் செய்ய வருவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. 

இதனை ஏற்கெனவே ஏசியாநெட் இணையத்தில் எழுதி இருந்தோம். இந்நிலையில் வேலூர் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் செல்ல இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரேமலதா. இதுகுறித்து அவர், ‘’உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராக உள்ளது. அதிமுகவுடான கூட்டணி தொடரும். வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்தது நியாயம் அல்ல. 

தற்போது அதே வேட்பாளர் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா நடக்கிறது. தகுதி நீக்கம் செய்திருந்தால் இதற்கு தீர்வு வந்திருக்கும்.
புதிய கல்வி கொள்கை என்பது மாணவர்களின் போக்கிற்கே விட வேண்டும். கல்வி வியாபாரம் ஆகி வருகிறது. வேலூர் தொகுதியில்
விஜயகாந்த் பிரசாரம் செய்வார்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!