எனக்கும் எஸ்.பி.பிக்கும் இடையே இருந்த நட்புக்கு சாட்சியாக இது ஒன்று போதாதா..? மேடையில் கலங்கிய இளைஞராஜா.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2021, 3:08 PM IST
Highlights

எங்கள் இருவரின் உழைப்பால் தான் நிறைய பாடல்களை உங்களால் கேக்க முடிகின்றது என்றார். எஸ்.பி. பி மருத்துவமனையில் இருந்த போது உனக்காக நான் காத்திருக்கின்றேன் சீக்கிரம் வா பாலு என  பேசி காணொளி ஒன்றை அவருக்கு அனுப்பினேன் அந்த காணொளியை கண்ட எஸ்.பி.பி அதை பார்த்து முத்தமிட்டதாக எஸ்.பி.பி  சரண் வாயிலாக அறிந்தேன்.

எஸ்.பி.பி முதலாம் ஆண்டு நினைவு தின படத்திறப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். எஸ்.பி.பி முதலாம் ஆண்டு நினைவு தினம்  திரை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை வடபழனி திரை இசை கலைஞர்கள் சங்க கலையரங்கத்தில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு எஸ்.பி.பி திருவுருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார். 

இந்த விழாவில் தென்னிந்திய  திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே செல்வமணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாடலாசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட இசை கலைஞர்கள் மற்றும்  எஸ்.பி.பி குடும்பத்தினர் சார்பில் வாசுராவ், திரை இசை கலைஞர் சங்க கெளரவ தலைவர் தினா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் பேசிய இளையராஜா, தனக்கும் எஸ் பி. பியுக்குமான நட்பு எல்லாரும் அறிந்த ஒன்று என்றார். எல்லோரிடத்திலும் மிகவும் எளிமையாக பழக கூடியவர் எஸ்.பி.பி, அவர் இசையமைப்பாளராக ஆன பிறகும் கூட எங்கள் நட்பு குறையவில்லை என தெரிவித்தார்.எங்கள் இருவரின் உழைப்பால் தான் நிறைய பாடல்களை உங்களால் கேக்க முடிகின்றது என்றார். 

எஸ்.பி. பி மருத்துவமனையில் இருந்த போது உனக்காக நான் காத்திருக்கின்றேன் சீக்கிரம் வா பாலு என  பேசி காணொளி ஒன்றை அவருக்கு அனுப்பினேன் அந்த காணொளியை கண்ட எஸ்.பி.பி அதை பார்த்து முத்தமிட்டதாக எஸ்.பி.பி  சரண் வாயிலாக அறிந்தேன். மேலும் யாரையாவது பார்க்க வேண்டுமா என கேட்டதற்கு (என்னை) ராஜாவை வர சொன்னதாக அறிந்தேன்.அந்த ஒன்று போதா தா எங்கள் நட்பின் சாட்சிக்கு எனகூறி மனம் நெகிழ்ந்தார்.நீங்கள் கேட்கும் ஒவ்வொரு பாடலிலும் நானும் இருப்பேன் எஸ்.பி.பியும் இருப்பார் இது எந்த காலத்திலும் மாறாதது என தெரிவித்தார்.

 

click me!