அடிதூள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. அரசாணை வெளியிட்டு அரசு அதிரடி சரவெடி.

Published : Sep 25, 2021, 02:39 PM ISTUpdated : Sep 25, 2021, 02:54 PM IST
அடிதூள்.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. அரசாணை வெளியிட்டு அரசு அதிரடி சரவெடி.

சுருக்கம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு அறிவிப்பு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது இது டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது  

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூபாய் 500 ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுதும் டாஸ்மாக்கை படிப்படியாக குறைக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு வாக்குறுதி அளித்துள்ளது. அதேநேரத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 சம்பள உயர்வு வழங்கப்படும் என அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தற்போது அதற்கான உத்தரவை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதில் டாஸ்மார்க் மேற்பார்வையாளர்களுக்கு 12,150 ரூபாயிலிருந்து 13,250 ரூபாயாகவும், விற்பனையாளர்களுக்கு 10,600 ரூபாயிலிருந்து 11, 100 ரூபாய் ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு 9500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் ஊதியத்தை உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த ஊதிய அறிவிப்பு டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் அது மகிழ்ச்சியையும், வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.

மேலும் உயர்த்தப்பட்டுள்ள இந்த ஊதியம் ஏப்ரல் 1- 2021 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும், முறையாக வழங்கப்படுகிறதா என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால், பணியில் உள்ள சுமார் 25,00 9 டாஸ்மாக் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!