பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து அசுர ருபமம்... நாடாளுமன்றத்தில் திமுக அட்ரா சக்கை..!

Published : Sep 25, 2021, 01:41 PM ISTUpdated : Sep 25, 2021, 01:42 PM IST
பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்து அசுர ருபமம்... நாடாளுமன்றத்தில் திமுக அட்ரா சக்கை..!

சுருக்கம்

 நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் பலம் 34ஆக உயர்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை அடுத்த பலம் மிக்க கட்சியாக தி.மு.க உருவெடுத்துள்ளது.

மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பதன் மூலம் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பலம் மிக்க கட்சியாக திமுக உருவாகியுள்ளது.

 

மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் குரல் ஓங்கி ஒலிக்கும் விதத்தில், தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் 24, மாநிலங்களவையில் 7 என ஆக மொத்தம் 31 எம்.பி.கள் இருந்தனர். அ.தி.மு.க உறுப்பினர் முகமத்ஜான் மறைவை அடுத்து அந்த இடம் காலியானது. அதேபோல், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதனால் தமிழ்நாட்டில் மாநிலங்களவையில் 3 உறுப்பினர் இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த மூன்று இடங்களுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இவர் கடந்த 3ம் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மற்ற இரண்டு இடங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க சார்பில் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோட் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். இதற்கான அறிவிப்பு 27ம் தேதி வெளியாகிறது.

மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள மூன்று இடங்களில் தி.மு.க உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் பலம் 34ஆக உயர்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை அடுத்த பலம் மிக்க கட்சியாக தி.மு.க உருவெடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!