தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது.. திமுகவை வம்பிழுத்த பாஜக அண்ணாமலை.

Published : Sep 25, 2021, 12:42 PM IST
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது.. திமுகவை வம்பிழுத்த  பாஜக அண்ணாமலை.

சுருக்கம்

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயாவின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது  உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகமாக நடந்து வருகிறது என்றும், இதற்கு அரசு செயலிழந்திருப்பதே காரணம் என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் அறிக்கையை போல இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயாவின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது  உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயமாக்கி இருக்கிறது, அதனால்தான் தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது என்றார். ஆனாலும்கூட தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றார். கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது என்ற அவர் இதற்கு அரசு செயலிழந்துள்ளதே காரணம் என்றார்.

மேலும் பேசிய அவர், அனைத்து மாநிலங்களிலும் கிச்சன் கேபினட் என்றபது இப்போது வெளிவந்துள்ளது என்றார், அதேபோல் நீட் தேர்வு அறிக்கை  திமுகவின் தேர்தல் அறிக்கையை விட சிறப்பாக உள்ளது என்றும்,  நீட் அறிக்கை சமூக நீதிக்கு எதிரானது என்று இல்லை என தெரிய வந்துள்ளது என்ற அண்ணாமலை, 99 சதவீத மாணவர்கள் நீட் பயிற்சி எடுத்துள்ளனர் என ஏ.கே ராஜன் கூறியுள்ளார், அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். அதேபோல ஏ.கே ராஜன் ஒரு அரசியல் தலைவரை போல அறிக்கை வெளியிட்டுள்ளார் அது ஒரு குழுவின்  அறிக்கை போல் இல்லை என்றும் அண்ணாமலை நீட் அறிக்கையை விமர்சித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!