கொரோனா நெருக்கடியில் இப்படி ஒரு சலுகையா..?? மாநகர் போக்குவரத்து கழகம் அதிரடி சரவெடி..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2020, 1:35 PM IST
Highlights

மாநகர் போக்குவரத்து கழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியானது. கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது. 

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உள்ள குரோம்பேட்டை பயிற்சி மையத்தில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவிப்புச் செய்துள்ளார். இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மாநகர் போக்குவரத்து கழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியானது. கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகிறது. தற்பொழுது கடந்த மார்ச் 2020 முதல் முறையான இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சியும் அளிக்கப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தரப்படுகிறது. தகுதியும் அனுபவமும் மிக்க ஓட்டுனர் பயிற்சி ஆசிரியர்களால் இப்பயிற்சியானது அளிக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு பிரத்தியேகமாக பெண் பயிற்சி ஆசிரியர்களாலேயே வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மேலும் ஆரம்ப நிலையில் மைதான பயிற்சி, பாலங்களில் ஏறி இறங்குதல், பின்னோக்கி செல்லுதல், 8வடிவ வளைவில் ஓட்டுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பயிற்சிகளும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மைதானத்திலேயே பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அடுத்த கட்டமாக பொது சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்காலம் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு ஒரு மாத காலம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி 3 மாத காலம் ஆகும். அரசு சார்ந்த இப்போக்குவரத்து பயிற்சி மையத்தில் ஓட்டுநர் பயிற்சி பெறுவதன் மூலம் பாதுகாப்புடனும் தன்னம்பிக்கையுடனும் வாகனம் ஓட்டும் திறனை பெற்றிட இயலும். 

குறைவான கட்டணத்தில் நிறைவான பயிற்சி அளிப்பதால், பொதுமக்கள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர், முதல்வர், மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளி, காந்தி நகர், குரோம்பேட்டை, தொலைபேசி எண் 044-295 35 177,  கைப்பேசி எண் 944 50 30 597 என்ற முகவரியில் அணுகவும் என மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 

click me!