பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அம்மா அரசு... பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்..!

By vinoth kumarFirst Published Sep 16, 2020, 12:43 PM IST
Highlights

பெண்களை பின் தொடர்வோருக்கான தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளான உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பெண்களை பின் தொடர்வோருக்கான தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளான உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் உரையர்றினார். அப்போது, வரதட்சணைக் கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.`இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்துக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழகங்கப்படும் என்றும், பெண்களை தவறான நோக்கத்துடன் பின்தொடரும் குற்றத்துக்கு 5 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக தண்டனை உயர்த்தப்பட்டிருக்கிறது எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்லூரி அமைக்க நடப்பாண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் புதிய  பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

click me!