நானும் இருக்கேன்னு காட்டிக் கொள்ளவே ஓபிஎஸ் இப்படி செய்கிறார்.. எகிறி அடிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன்..!

By vinoth kumarFirst Published Aug 3, 2021, 1:13 PM IST
Highlights

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுப்பதற்காகத் தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். போக்குவரத்துத் துறையில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். அப்படி ஏதாவது குறிப்பிட்டு புகார் கூறினால், எங்காவது தவறு நடந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. பேருந்துகளில் ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்யப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இவரின் இந்த குற்றச்சாட்டை போக்குவரத்துறை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. அதைக் கெடுப்பதற்காகத் தவறான தகவல்களை ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். போக்குவரத்துத் துறையில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். அப்படி ஏதாவது குறிப்பிட்டு புகார் கூறினால், எங்காவது தவறு நடந்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதுவரை அப்படி கட்டண உயர்வு, கட்டணத்தில் மாற்றம் எதுவும் கிடையாது. ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில்தான் பயணிகள் பயணிக்கின்றனர்.

போக்குவரத்துத் துறையில் முதல்வருக்கு உள்ள நல்ல பெயரை ஓ.பன்னீர்செல்வம் கெடுக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தான் இருப்பதை அவ்வப்போது காட்டிக் கொள்வதற்காக அறிக்கை விடுக்கிறார். இப்போது விடப்பட்டிருக்கும் அறிக்கை தவறானது. ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தி உள்ளனர். மேலும், 4,43,163 மாற்றுத்திறனாளிகள் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்துள்ளனர். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

click me!