சின்ன வயசுலயே இவ்வளவு பக்குவமா.! அண்ணாமலையை மனதார பாராட்டிய திமுக துரைமுருகன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2021, 12:30 PM IST
Highlights

அதிமுகவினர் நேற்று நடைப்பெற்ற படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை, ஒரு கட்சி கலந்துக்கொள்வதும் கலந்துக்கொள்ளாததும், அவர்களின் விருப்பத்தை பொருத்தது,  

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழாவில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலையில் நல்ல உள்ளத்தை பாராட்டுவதாக திமுக பொதுச் செயலாளரும் முக்கிய அமைச்சருமாக துரைமுருகன் வியந்து நெகிழ்ந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 

அதிமுகவினர் நேற்று நடைப்பெற்ற படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை, ஒரு கட்சி கலந்துக்கொள்வதும் கலந்துக்கொள்ளாததும், அவர்களின் விருப்பத்தை பொருத்தது, ஆனால் அவர்கள் கூறும் காரணம், ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் திமுக பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் எங்களுக்கு அழைப்பிதழ் மட்டுமே அனுப்பி வைத்தனர்.

ஆனால், நாங்கள் அப்படி அல்ல, விழா நடத்த திட்டமிட்டபோதே, முதல்வர் என்னை அழைத்து, எதிர்கட்சித்தலைவரை தொடர்பு கொண்டு, குடியரசு தலைவர், ஆளுநர், முதல்வர் அமரும் வரிசையிலேயே அமர இடம் ஒதுக்கப்படும், அதேப்போல் விழாவில் உரையாற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், அனைவரிடம் கலந்தாலோசித்து கூறுவதாக கூறினார். ஆனால் அவர்கள் கலந்துக்கொள்ளவில்லை என்பதை என்னிடம் கூறாமல், சட்டப்பேரவை செயலாளரை அழைத்து கலந்துக்கொள்ளவில்லை என இ.பி.எஸ் கூறியுள்ளார். ஜெயலலிதா படத்திறப்பு விழாவில், அப்போது எதிர்கட்சியாக இருந்த எங்களுக்கு உரிய மரியாதை இல்லை என்பதால் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் உரிய மரியாதை அளிப்போம் என்று கூறினோம். 

ஆனால், அதே நேரதேதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழாவில் கலந்துக்கொண்டதற்காக, அவரது நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன் என துரைமுருகன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற கருத்தை ஏற்கமாட்டோம், என கர்நாடக முதல்வர் கூறுவது ஏற்புடையது அல்ல என்றார். அதாவது, திமுக- பாஜகவிடையே பல்வேறு விஷயங்களில் கருத்து மோதல் இருந்து வருகிறது. நீட் தேர்வு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, என பல விஷயங்களின் நேரெதிராக கருந்து கூறி வருகின்றனர். அதேபோல் கடந்த சில தினங்களாக மேகதாது அணை விவகாரத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் அண்ணாமலைக்கு இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. 

இந்த மோதலுக்கு மத்தியிலும் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியின்  படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டது திமுக தொண்டர்கள் மத்தியில் மட்டும் அல்ல அக்கட்சியின் தலைவர்களையும் ஆச்சர்யமும், நெகிழ்ச்சியும் அடைய வைத்துள்ளது. அதன் வெளிபாடாகவே திமுக பொருளாளர் துரை முருகன் அண்ணாமலையில் பக்குவத்தையும், மூத்தவர்களுக்கு அவர் அளிக்கும் மரியாதையையும் அங்கிகரிக்கும் வகையில் வியந்து பாராட்டியுள்ளார்.  

 

 

click me!