இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி ட்ராமா.. பாஜகவை டார்டாராக கிழித்த சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2021, 1:06 PM IST
Highlights

ஆனால் இங்கு ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களும் தனி தனியாக பிரச்சினை ஏற்படும் நேரத்தில் தேசியத்தின் மீது நம்பிக்கை வராது என்று தெரிவித்தார். மேலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகாவில் உள்ள பாஜக சொல்கிறது, அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக பாஜக சொல்கிறது. மத்தியிலும் பாஜக அரசு இதுகுறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் உள்ளனர்.

மாநிலத்திற்கு ஏற்றவாறு கருத்தை முடிவெடுத்து கொண்டு இறையாண்மை ஒற்றுமை குறித்து பாஜக பேசுவது ஏற்புடையது அல்ல என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். சென்னை சின்னப்போருர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்: தேசியத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால், இந்த தேசம் நமக்கு நன்மை செய்யும் என்று நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும். ஆனால் இங்கு ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களும் தனி தனியாக பிரச்சினை ஏற்படும் நேரத்தில் தேசியத்தின் மீது நம்பிக்கை வராது என்று தெரிவித்தார். 

மேலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகாவில் உள்ள பாஜக சொல்கிறது, அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக பாஜக சொல்கிறது. மத்தியிலும் பாஜக அரசு இதுகுறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் உள்ளனர். இப்படி மாநிலத்திற்கு ஒரு கருத்தை வைத்து கொண்டு அவர்கள் தேச ஒற்றுமை குறித்து பேசுவது ஏற்றுகொள்ள முடியாது என்று தெரிவித்தார். விவசாயத்தின் மூலம் மட்டுமே தமிழகத்தை வளர்க முடியும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்று கூறிய அவர், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு மாடு மேய்க்க சொல்வார் என்று பொய் கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்று தமிழகத்தில் படித்த இளைஞர்கள் சாலை பணியாளர்,,துப்புரவு பணியாளர் போன்ற பணிகளில் வேலை செய்து வருகின்றனர் என்றார். 

வேளாண்துறைக்கு என தமிழகத்தில் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னரே அதுகுறித்து பேச முடியும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள் எட்டவுள்ள நிலையில் தற்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும், இறையன்பு, சைலேந்தரபாபு போன்ற அதிகாரிகளை நியமனங்கள் மட்டுமே நம்பிக்கை அளித்துள்ளதாக கூறினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் தனித்து போட்டியிடும் என்றும், கூட்டணியில் இருக்கும் நேரத்தில் தனித்துவத்தை இழக்க நேரிடும், கருத்தை முழுமையாக தெரிவிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும் மக்களை மட்டுமே நம்பி அரசியல் செய்வதாக கூறினார். பெகாஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்காமல் திசை திருப்பவே OBC இடஒதுக்கீடு வழங்கி இருப்பதாக கூறினார்.

 

click me!