நீங்கள் பயணிக்கும் பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா.. உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்..

By Ezhilarasan BabuFirst Published Nov 1, 2021, 4:15 PM IST
Highlights

தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. 

போக்குவரத்து  அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும்  ஆம்னி பேருந்துகளில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீதான  சிறப்பு சோதனை தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது என போக்குவரத்து ஆணையரகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் 12 மண்டல இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்களின் மூலம் செயலாக்கப் பணிகள்  முடுக்கிவிடப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும்  மோட்டார் வாகன ஆய்வாளர்கள்  இணைந்து அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக சிறப்பு சோதனை செய்ததில் 222 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அபராதமாக ரூ.3,11,500 மற்றும் வரி ரூ.57,000 வசூலிக்கப்பட்டது. இணக்கக் கட்டணமாக ரூ.4,32,500 நிர்ணயிக்கப்பட்டது. பின்வரும் 8 வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்தற்காகவும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்: 40 வருஷ அரசியலில் விழுந்த இடி.. துடி துடிக்கும் ராமதாஸ்.. விட மாட்டோம் என கதறிய பாமக பாலு..

1. TN 20 BR 0973,  2. PY01CG8458,  3.NL01B1846,  4.PY01CG8457,    5.TN13V5202,  6.PY05A9255,   7.NL01B1242,  8.TN21 AU 5907.
• சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு இச்சோதனை வரும் 08.11.2021 வரை நடைபெற உள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free – 1800 425 6151) மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கூடுதல் போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. ஆண்டு தோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்கள் தங்கள்  சொந்த ஊருக்குச் சிரமமின்றி சென்றுவரும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த  வகையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ஒன்றாம் தேதி வரை தினசரி இயங்க கூடிய 2,100 பேருந்துகள் உடன் கூடுதலாக 3 ஆயிரத்து 506 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதில் சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து அடுத்த 3 நாட்களுக்கு 6734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இதையும் படியுங்கள்: எதிர் கட்சியா இருந்த போது என்னென்ன பேசுனீங்க.. திமுகவின் இரட்டை வேடம்.. ஸ்டாலினை பிரிச்சு மேய்ந்த ஓபிஎஸ்.

அதேபோல் சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கேகே நகர் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்தும், தாம்பரம் ரயில் நிலையம் என ஆறு வழித்தடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக இன்று முதல்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் காலை 8 மணி முதல் மழை பெய்து வருவதால் பேருந்துகள் பயணிகள் கூட்டமின்றி காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் நாளை , நாளை மறுதினம் சொந்த ஊருக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னைக்கு வர 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,319 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 5 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 17,719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
 

click me!