தமிழ்நாட்டில் போக்குவரத்துறை தனியார்மயம் ஆகிறதா? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

Published : Mar 06, 2023, 01:53 PM ISTUpdated : Mar 06, 2023, 01:59 PM IST
தமிழ்நாட்டில் போக்குவரத்துறை தனியார்மயம் ஆகிறதா? அமைச்சர் சிவசங்கர் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

சுருக்கம்

மாணவர், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். தனியார் பேருந்துகளால் அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது.

தனியார் பேருந்து எந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும். எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அரசே நிர்ணயம் செய்யும் என அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னை மாநகராட்சியில் தனியார் பேருந்து இயக்கம் குறித்து தவறான செய்தி பரவுகிறது. தனியார் பேருந்து இயக்கப்பட்டாலும் அரசு பணியாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். உலக வங்கி அளித்துள்ள கருத்துரை தொடர்பாக ஆய்வு நடத்தவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசகர் நியமனம் செய்யபட்டு அறிக்கை பெறப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். 

தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கவே திட்டம். தனியார் பேருந்து விவகாரம் குறித்து அதிமுக ஆட்சி காலத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது. நடைமுறையில் இருக்கும் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தப்பட மாட்டாது. மாணவர், மகளிர், முதியோர்களுக்கான பேருந்து சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். தனியார் பேருந்துகளால் அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது.  அரசு பேருந்து தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது.

தேவை அதிகம் உள்ள வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்து விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளும் அரசிற்கே உள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். டீசல் விலை உயரும் போதெல்லாம் கர்நாடகா மாநிலத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தவித கட்டண உயர்வுமின்றி பேருந்து சேவையை அரசு வழங்கி வருகிறது. தனியார் பேருந்து எந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும். எவ்வளவு கட்டணம் என்பது குறித்து அரசே நிர்ணயம் செய்யும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!