பாஜகவிலிருந்து அதிமுகவில் இணைந்த சிடிஆர் நிர்மல்குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகளால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார் நேற்று மதியம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிர்மல் குமார் தன்னை அதிமுகவில் இணைந்துக்கொண்டு உள்ளார். பாஜகவில் இருந்து விலகிய நிர்மல்குமார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.
பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம்.
தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய" மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அண்ணாமலையுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியதாக நிர்மல்குமார் மீது மாற்றுத்திறனாளிகள் அமைப்பை நடத்திவரும் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
மேலும், நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், ‘அன்பு சகோதரர் திரு. நிர்மல் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்’ என்று வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தகாத உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. கதறும் சிறுவனின் தாய்!!