அதிமுகவுடனான கூட்டணி முறிகிறதா..? பாஜக எல்.முருகன் முக்கிய அறிவிப்பு..!

Published : Jun 26, 2021, 03:48 PM IST
அதிமுகவுடனான கூட்டணி முறிகிறதா..? பாஜக எல்.முருகன் முக்கிய அறிவிப்பு..!

சுருக்கம்

 உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தமிழக அலுவலகமான கமலாலயத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு, எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.முருகன், ’பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தயாராக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்யப்படும்’’என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

TVK Budget: இது பட்ஜெட் இல்ல, வெறும் ஸ்டிக்கர் வேலை - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
Udhayanidhi: உதயநிதியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? விமர்சித்த தலைவர்களை கண்டித்த ஸ்டாலின்!