சென்னையில் வசித்தது குற்றமா..? வெறுத்து ஒதுக்கும் வெளியூர்வாசிகள்..!

By Thiraviaraj RMFirst Published Jun 15, 2020, 5:46 PM IST
Highlights

சென்னையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் மதுரை வந்த நபர்கள் உள்ளே வராதீர்கள் என்று மதுரையில் உள்ள ஒரு கடையில் அதிரடி அறிவிப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் மதுரை வந்த நபர்கள் உள்ளே வராதீர்கள் என்று மதுரையில் உள்ள ஒரு கடையில் அதிரடி அறிவிப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் வசிக்கும் தென் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்  சேர்ந்தவர்கள் இ-பாஸ் பெற்றும் சில நேரங்களில் இ பாஸ் இல்லாமலும் அவரவர் ஊரை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் மதுரை பழங்காநத்தம் புறவழி சாலையில் உள்ள ஒரு கடையில் 'வாடிக்கையாளர் நலன் கருதி, கரோனா பரவலைத் தடுக்க கடந்த மூன்று மாதங்களில் சென்னையிலிருந்து இருந்து வந்த வாடிக்கையாளர்கள் உள்ளே வருவதை தவிர்க்கவும்' என கடையின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இது அப்பகுதியில் உள்ள சென்னை வாழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சில பகுதிகாளில் சென்னைவாசிகள் என்று தெரிந்தாலே வேற்றுக்கிரகவாசிகளை போல மக்கள் வெறுத்து ஓடுகின்றனர். சென்னைவாசிகளுக்கு இருந்த மரியாதை கொரோனாவால் தலைகீழாக மாறியுள்ளது. 
 

click me!