மோடி அரசின் தவறுகளை மறைக்க தமிழக அரசை குறை கூறுவதா..? பாஜகவினர் மீது பாய்ந்த தங்கபாலு..

By Ezhilarasan BabuFirst Published May 31, 2021, 4:05 PM IST
Highlights

மத்திய அரசின் தவறுகளை மறைக்க தமிழக அரசின் மீது தமிழக பாஜகவினர் குறை கூறி வருகின்றனர் என  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கபாலு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தவறுகளை மறைக்க தமிழக அரசின் மீது தமிழக பாஜகவினர் குறை கூறி வருகின்றனர் என  தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கபாலு தெரிவித்துள்ளார்.சென்னை இராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராமையாவின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு தலைமையில் நிர்வாகிகள் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராமையா அனைவரது அன்பையும் ஒருங்கே பெற்று திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டினார். கொரோனா தடுப்பு மருந்துகளுக்காக மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், 

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது எந்தவிதத்திலும் நியாயம் அல்ல என்றார். அதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கையாக உள்ளது என்றார்.மேலும், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுவதாகவும் கூறிய அவர்,  மத்திய அரசின் தவறுகளை மறைக்க தமிழக அரசு மீது தொடர்ந்து தமிழக பாஜகவினர் குறை கூறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். 

 

click me!