தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது.. முதல்வர் ஸ்டாலினை புகழும் அதிமுக சீனியர் எம்எல்ஏ..!

By vinoth kumarFirst Published May 31, 2021, 3:39 PM IST
Highlights

இந்த இயக்கத்தைத் உயர்த்தக் காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது சசிகலா ஒதுங்கி இருக்க வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

இந்த இயக்கத்தைத் உயர்த்தக் காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது சசிகலா ஒதுங்கி இருக்க வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி;-  கொரோனா பேரிடர் சமயத்தில் தமிழகத்தில் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது. திமுக அரசு பதவியேற்று 24 நாட்கள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் துறை ரீதியான பணிகள் குறித்து ஆய்வு செய்யவே காலம் போதுமானதாக இருக்கும். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. சசிகலா அதிமுகவில் இல்லை. இந்த குழப்பத்திற்கு ஒரு அதிமுக தொண்டரும் செவிசாய்க்க மாட்டார்கள்.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும், பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளும் கட்டிக்காத்து, இந்த இயக்கத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த இயக்கத்தை ஏதாவது ஒரு வகையில் திசைதிருப்பி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.அவர்களுடைய எண்ணம் ஈடேறாது. சசிகலாவிடம் எந்த ஒரு அதிமுக தொண்டரும் பேசவில்லை. மாறாக, சசிகலாதான் தொண்டர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார். அவர் பேசும் தொண்டர் அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல. அமமுகவைச் சேர்ந்தவர்.

சசிகலா தன்னோடு இருக்கும் ஒருசில நபர்களைத் தேர்வு செய்து இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்தக் குழப்பம் நிச்சயமாக வெற்றி அடையாது. இதன் மூலம் சசிகலாதான் ஏமாறுவார்.

இந்த இயக்கத்தைத் உயர்த்தக் காரணமாக இருந்த ஜெயலலிதா ஆன்மா சாந்தி அடைவதற்காகவாவது சசிகலா ஒதுங்கி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஜெயலலிதாவின் பழி பாவம் சசிகலாவையே சாரும் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

click me!