ஆசிரியர்களை நம்பவைத்து கழுத்தறுத்த திமுக.. ஆளுங்கட்சியை ரெப்ட் ரைட் வாங்கிய டிடிவி.தினகரன்.!

Published : Mar 04, 2022, 06:56 AM IST
ஆசிரியர்களை நம்பவைத்து கழுத்தறுத்த திமுக..  ஆளுங்கட்சியை ரெப்ட் ரைட் வாங்கிய டிடிவி.தினகரன்.!

சுருக்கம்

வேலை வாய்ப்பக முன்னுரிமையையும் (Employment Seniority) பின்பற்றாமல், தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றதையும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என அரசாணை பிறப்பித்திருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்காமல் ஏமாற்ற நினைக்கும் திமுக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்டளார்.

இதுதொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்காமல் ஏமாற்ற நினைக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலை வாய்ப்பக முன்னுரிமையையும் (Employment Seniority) பின்பற்றாமல், தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றதையும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என அரசாணை பிறப்பித்திருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அவர்களை இப்படி நம்பவைத்து கழுத்தறுப்பது சரியானதல்ல.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பல்வேறு நிலை ஆசிரியர் பணியிடங்களில் அவர்களை பணி அமர்த்தவேண்டும். திமுக அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து தொடர்ந்து நடந்துவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!