சசிகலா பெயர் நீக்கம் திட்டமிட்ட சதியா? வெளிச்சத்திற்கு வந்த தேனி அதிகாரி விவகாரத்தால் குழப்பம்.!

By vinoth kumarFirst Published Apr 9, 2021, 2:40 PM IST
Highlights

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அரசுடமையானதும், அங்கே தங்கியிருந்த சசிகலா மற்றும் இளவரசியின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேனியில் இருந்து டிரான்ஸ்பர் ஆகிய நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் அவருக்கும், இதே முகவரியில் உள்ள தற்போதைய  ஆட்சியருக்கும் வாக்காளர் உரிமையை அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் சசிகலா பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியவர்கள் ஏன் முன்னாள் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பெயரை ஏன் நீக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. 

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த பல்லவி பல்தேவ் பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக துணை முதல்வர் வகித்து வரும் நிதித்துறையில் வருவாய்த்துறை இணை செயலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன் உன்னி தேனி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். 

இவருக்கு தேனி ஆட்சியர் பங்களா முகவரி மூலம் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபட்டது. புதிய வாக்காளர் பட்டியலில் மாவட்ட ஆட்சியர் பெயர் சேர்க்கப்படும் நிலையில், இங்கிருந்து டிரான்ஸ்பர் ஆன பல்லவி பல்தேவ் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அவரது பெயரை பட்டியலில் இருந்து நீக்கவில்லை.

இதனால் வாக்குப்பதிவு தினத்தன்று தற்போதைய ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி வாக்களித்த அதே வாக்குச்சாவடி மையமான வடபுதுப்பட்டி இந்து முத்தாலம்மன் பள்ளியில், பல்லவி பல்தேவ் சென்னையில் இருந்து முதல்நாளே தேனி மாவட்டம் வந்து தங்கியிருந்து வாக்களித்தார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அரசுடமையானதும், அங்கே தங்கியிருந்த சசிகலா மற்றும் இளவரசியின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேனியில் இருந்து டிரான்ஸ்பர் ஆகிய நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் அவருக்கும், இதே முகவரியில் உள்ள தற்போதைய  ஆட்சியருக்கும் வாக்காளர் உரிமையை அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

click me!