விக்கிரவாண்டியில் திமுக தோல்வி..! காரணம் அசுரன் படமா? விழுப்புரத்தில் பீதி கிளப்பும் பாமக!

By Selva KathirFirst Published Oct 27, 2019, 6:18 PM IST
Highlights

அசுரன் படம் பார்த்துவிட்டு ஸ்டாலின் போட்ட ட்வீட், திமுகவின் முரசொலி அலுவலக நிலம் தொடர்பான சர்ச்சயை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் அது தான் விக்கிரவாண்டியில் திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று பாமகவின் இப்போது கூறி வருகின்றன.

அசுரன் படம் பார்த்துவிட்டு ஸ்டாலின் போட்ட ட்வீட், திமுகவின் முரசொலி அலுவலக நிலம் தொடர்பான சர்ச்சயை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்த ஒன்று, ஆனால் அது தான் விக்கிரவாண்டியில் திமுகவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று பாமகவின் இப்போது கூறி வருகின்றன.

தலித்துகளுக்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் பெரும்பாலும் தற்போது அந்தந்த ஊர் குடியானவர்கள் என்று கூறப்படும் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த மக்களின் கட்டுப்பாட்டில் தான்  உள்ளது என்று கூறுகிறார்கள். வெறும் தரிசாக கொடுக்கப்பட்ட அந்த நிலத்தை தலித்துகள் ஒரு கட்டத்தில் மிரட்டல், அதிக பணம், நெருக்கடி போன்ற காரணங்களால் தலித்துகள் குடியானவர்களிடம் விற்றுவிட்டதாக ஒரு பேச்சு உண்டு. தரிசாக கிடந்த அந்த நிலத்தை விளைநிலமாக மாற்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருபவர்கள் வன்னியர்கள், கவுண்டர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சொல்லப்படுகிறது. அதிலும் விழுப்புரம் வட்டத்தில் இந்த பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரம், அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று கூறிய ஸ்டாலின் இதன் மூலம் அவர்கள் வாக்குகளை மொத்தமாக அள்ளிவிடலாம் என்று கணக்கு போட்டதாகவும் அதே போல் பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக பேசி தலித்துகள் வாக்குகளையும் அள்ளிவிடலாம் என்றே அசுரன் படத்தை அரசியலுக்காக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். இதனை தெரிந்து கொண்ட ராமதாஸ், அசுரன் பட விவகாரத்தை பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரமாக்கி விக்கிரவாண்டி வன்னியர்களை உசுப்பிவிட்டதாக கூறுகிறார்கள்.

வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின் போட்ட ட்வீட்டை வாக்குப் பதிவு நாள் வரை சர்ச்சையாக்கியதுடன் திமுகவிற்கு வாக்களித்தால் பஞ்சமி நிலம் என்ற பெயரில் வன்னியர் நிலங்கள் தலித்துகளுக்கு மாற்றப்பட்டுவிடும் என்று வாட்ஸ்ஆப்பில் ஒரு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்தே அங்குள்ள வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக அதிமுகவிற்கு வாக்களித்ததாகவும், இதனை அதிமுகவால் கூட நம்ப முடியவில்மைல என்றும் கூறுகிறார்கள்.

click me!