பாஜகவுடன் இணைகிறதா தமிழ் மாநில காங்கிரஸ் ! ஜி.கே.வாசன் சொன்ன பகீர் பதில் !!

By Selvanayagam PFirst Published Oct 27, 2019, 4:38 PM IST
Highlights

பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிஸை இணையப் போவதாக வரும் செய்தி வதந்தியே என்று  அக்கட்சியின் நிறுவனர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 
 

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய வாசன், நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வருக்கும், தேர்தல் பணிகளில் தாமாகாவின் செயல்பாடுகளுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்

அப்போது பேசிய அவர், "அதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்த வாக்காளப் பெருமக்களுக்கு எங்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் தவறான பொய் பிரச்சாரங்கள் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் திமுக வழக்கு தொடர்ந்ததால் தான் கடந்த 3 ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என அதிமுக அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றது. ஓரிரு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்படுத்த இந்த கூட்டணி பாடுபடும் என்றார்.

நாங்குநேரி விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளில் கிடைத்த வெற்றிக்கு சீன அதிபர், இந்திய பிரதமர் மோடியின் தமிழக வருகைதான் என்பது தவறு. அதை அதிமுகவும் சொல்லவில்லை, தமாகா-ம் சொல்லவில்லை, அது அவரவர் தனிப்பட்ட கருத்து. உலக நாடுகள் மத்தியில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுவிட்டது 

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடர்பாக தமிழக அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

சமூக வலைத்தளங்களில்தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவோடு இணையபோவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என திட்டவட்டமாக தெரிவித்தார்.

click me!