ஊரடங்கு தளர்வால் வேகமெடுக்கிறதா கொரோனா..?? ஆக்டோபர் மாதத்தில் அதிகரிக்கும் என்பது வெறும் யூகம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 7, 2020, 11:20 AM IST
Highlights

இந்நிலையில்  வருகிற அக்டோபர் மாதம் கொரோனா உச்சத்தை அடையும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

தமிழகத்தில் முழு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்  என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. வழிபாட்டு தலங்களும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது ஐந்து மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளது. 

இந்நிலையில்  வருகிற அக்டோபர் மாதம் கொரோனா உச்சத்தை அடையும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- சென்னையில் 60 சதவீதம் பேர் முகக்கவசம் அணியத் தொடங்கி விட்டனர். அறிகுறிகள் தென்பட்டதும் முகாம்களுக்கு வந்துவிடுகிறார்கள். இதனால் சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு, கடலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. 

இதைக் கட்டுப்படுத்த தனி கவனம் செலுத்தப்படுகிறது, அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்று சொல்வதெல்லாம் யூகம்தான். கவனமாக இருப்பதற்காக சொல்லப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அடுத்த பத்து நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா.? என்று தெரிந்துவிடும், தெருமுனை கடைகளுக்குச் சென்றால் கூட பாதுகாப்பற்ற முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து சென்றால் நோய் வராமல் தடுத்துவிடலாம், ஒரு மாவட்டத்தில் கொரோனா குறைந்தால் மற்றொரு மாவட்டத்தில் அதிகரிக்கிறது. இதனால் தான் தினமும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் வருகிறது. எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு  அதிகரிக்கிறதோ அங்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!