அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்... கண் தானம் செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Sep 7, 2020, 11:19 AM IST
Highlights

தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிப்பதையொட்டி கண்தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிப்பதையொட்டி கண்தானம் செய்வதாக முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் லட்சக்கணக்கானோர் பார்வை இன்றி தவிக்கின்றனர். ஆனால் கண் தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும். நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானம் அளிப்பதன் மூலம் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25ம் தேதிமுதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு 15 நாட்கள் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில், நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

click me!