30 ஓட்டு வாங்கினது எல்லாம் ஒரு வெற்றியா..?? விஜய் மக்கள் இயக்கத்தை அசிங்கப்படுத்திய அன்புமணி ராமதாஸ்.

Published : Mar 05, 2022, 06:34 PM IST
30 ஓட்டு வாங்கினது எல்லாம் ஒரு வெற்றியா..??  விஜய் மக்கள் இயக்கத்தை அசிங்கப்படுத்திய அன்புமணி ராமதாஸ்.

சுருக்கம்

இதற்கு முன்பாக நகர்ப்புறத்தில் பாமகவுக்கு இந்த அளவிற்கு வாக்குகள் கிடைக்காது.  ஆனால் இப்போது கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். பல மாவட்டங்களில் பல பகுதிகளில் குறிப்பாக  நகர்ப்புறங்களில் தமிழகம் முழுவதும் பரவலாக பாமக வெற்றி பெற்றுள்ளது. எங்களது வெற்றி என்பது ஒரு பைசா கூட மக்களுக்கு கொடுக்காமல் பெற்றிருக்கிற வெற்றி என்றார். 

விஜய் மக்கள் இயக்கம் பெற்றதெல்லாம் ஒரு வெற்றியா? என  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 30 வாக்குகள் வாங்கினால் சாதாரணமாக ஒரு வார்டில் வெற்றி பெறமுடியும், அப்படிப்பட்ட வெற்றிகளை தான் விஜய் மக்கள் இயக்கத்தினர் பெற்றுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அனேக இடங்களில் வெற்றி பெற்றது. 90 சதவீத வெற்றியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கைப்பற்றியது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவை கைப்பற்றியுள்ளது. அதேபோல் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக பாஜக பாமக அமமுக உள்ளிட்ட கட்சிகள். வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளன என்றே சொல்லலாம். பல ஆண்டுகளாக தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகளே மண்ணைக் கவ்வியுள்ள நிலையில் கடந்த கிராமப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சில இடங்களில் வெற்றியை கைப்பற்றி உள்ளனர்.

ரஜினிகாந்த் போலவே பல ஆண்டுகளாக அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என தனது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்  இலை மறை காயாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார். கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு மேற்பட்ட வார்டு உறுப்பினர்களை விஜய் மக்கள் இயக்கம் பெற்றது. இதேபோல நகர் புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கினர். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்திற்காக இதுவரை நடிகர் விஜய் வெளிப்படையான அறிவிப்போ அல்லது தேர்தல் பிரச்சாரத்திலோ ஈடுபட வில்லை. அதாவது அவர் வெளிப்படையாக அரசியலுக்கு வருவதை தவிர்த்து, இலைமறைகாயாக,  ஈயம் பூசியது போலவும் இருக்கணும், பூசாதது போலவும் இருக்கணும் என்ற ரேஞ்சுக்கு அரசியல் செய்து வருகிறார்.

இந்நிலையில்தான் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் போட்டியிட்டதில் 129 பேர் வெற்றி பெற்றனர். பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். அதன்பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் புதுக்கோட்டை நகராட்சி 4 வது வார்டில் போட்டியிட்ட பர்வேஷ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3வது வார்டில் போட்டியிட்ட மோகன்ராஜ்,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி போட்டியிட்ட வேல்முருகன், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சையது முகமது ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் சென்னையில் 1 வார்டில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை விஜய் மக்கள் இயக்கம் பெற்றது.

இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவலாக விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் பலரும் பல வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி குறித்து கருத்து கூறி வருகின்றனர். அந்த வரிசையில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,  நடந்து முடிந்த  நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாமகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சொல்ல மாட்டேன் ஆனால் கௌரவமான வெற்றி என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்,  பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஒரு கிராமத்து கட்சி, அதை நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு நாங்கள் நிரூபித்தோம். அந்த அடிப்படையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம். 

இதற்கு முன்பாக நகர்ப்புறத்தில் பாமகவுக்கு இந்த அளவிற்கு வாக்குகள் கிடைக்காது.  ஆனால் இப்போது கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். பல மாவட்டங்களில் பல பகுதிகளில் குறிப்பாக  நகர்ப்புறங்களில் தமிழகம் முழுவதும் பரவலாக பாமக வெற்றி பெற்றுள்ளது. எங்களது வெற்றி என்பது ஒரு பைசா கூட மக்களுக்கு கொடுக்காமல் பெற்றிருக்கிற வெற்றி என்றார். அப்போது
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 129 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே என அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, அவர்கள் எந்தெந்த இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?  நீங்கள் அதை  விசாரித்தீர்களா.? என கேள்வி எழுப்பி அவர், அரசியலை பொருத்தவரையில் யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் வந்து களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பார்க்கலாம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இப்படித்தான் கடந்த கிராமப்புற ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் 100 இடங்களில் வென்றது என ஊடகங்கள் கூறினீர்கள். அவர்கள்  ஜெயித்தது எந்தமாதிரியான இடங்கள்.? அவர்கள் எல்லாம் சும்மா.. பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள், அதெல்லாம் ஒரு 30 ஓட்டுகள் வாங்கினால் ஜெயிக்கலாம், ஆனால் அதையெல்லாம் ஊடகங்கள் மிகைப்படுத்தி இப்படி ஜெயித்து விட்டார்கள், அப்படி ஜெயித்து விட்டார்கள் என்று கூறுகிறீர்கள். இதே கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக 118 பஞ்சாயத்து தலைவர்களாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்கள் வென்றது பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், நாங்கள் வென்றது பஞ்சாயத்து தலைவர்கள். ஊடகங்கள் அதைதான் பெரிது படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!