நடிகர் கமலுடன் கூட்டணியா? சீமான் தெரிவித்த அதிரடி கருத்து!

Published : Mar 01, 2019, 12:21 PM ISTUpdated : Mar 01, 2019, 01:42 PM IST
நடிகர் கமலுடன் கூட்டணியா? சீமான் தெரிவித்த அதிரடி கருத்து!

சுருக்கம்

நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முயற்சி செய்துவருகிறார். தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசுவேன் என்று கமல் அறிவித்தார். இதேபோல திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள சிபிஎம் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தைச் சந்தித்து பேசினார். ஆனால், அக்கட்சி திமுகவுடன் கூட்டணி என்று உறுதியாக அறிவித்துவிட்டது.

 இதற்கிடையே நாம் தமிழர் கட்சியை கமல் ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகிறது. நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியபோது நேரில் சென்று சீமான் வாழ்த்து தெரிவித்ததால், இந்தக் கேள்வி பொதுவெளியில் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் அது பற்றி தனது கருத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். “எங்களுக்கென தெளிவான கொள்கை இருக்கிறது. தான் ஓர் இந்தியரா, திராவிடரா, தமிழரா என்ற முடிவுக்கே கமலாம் இன்னும் வரமுடியவில்லை.

மனிதம்தான் தன் அடையாளம் என்று கமல் சொல்கிறார். மனிதம்தான் அடையாளம் என்றால், இவர் நிறைய மலையாள, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கிறாரே, அங்கே போய் கட்சி தொடங்கி தேர்தலில் நிற்கலாமே. ஏன் தமிழகத்தில் நிற்க வேண்டும்? அவரிடம் தத்துவக் குழப்பம் உள்ளது. அது அவருக்கு பெரிய தடுமாற்றமாக உள்ளது” என்று சீமான் தெரிவித்திருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!