அதிமுக கூட்டணியில் இணந்தது தேமுதிக... 1 ராஜ்ய சபா சீட்டுடன் 5 தொகுதிகள் ஒதுக்கீடு..!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2019, 11:20 AM IST
Highlights

அங்கே, இங்கே என ஊசலாடிக் கொண்டிருந்த தேமுதிக ஒருவழியாக அதிமுக கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. 

அங்கே, இங்கே என ஊசலாடிக் கொண்டிருந்த தேமுதிக ஒருவழியாக அதிமுக கூட்டணியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிக, தமாகா கட்சிகளையும் கூடணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாஜகவுக்கு 5 சீட்டுகளும் பாமகவுக்கு 7 தொகுதி ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் தேமுதிகவுக்கு குறைவான தொகுதிகளை அதிமுக ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த தேமுதிக, பாமகவை விட நாங்கள் செல்வாக்கான கட்சி. ஆகையால் பாமகவை விட கூடுதலாக ஒரு சீட்டாவது கொடுத்தால் தான் கூட்டணிக்கு சம்மதிப்போம் என வீராப்பு காட்டியது. இதனால் திமுக கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்க காய் நகர்த்தப்பட்டது. இதனால் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் இரு பெரும் கட்சிகளும் தேமுதிக வருகைக்காக தேவுடு காத்துக் கிடந்தன. இந்நிலையில் தேமுதிகவுக்கு 5 மக்களவை தொகுதிகளும், 1 ராஜ்ய சபா சீட்டும் தருவதாக அதிமுக இறங்கி வந்துள்ளதால் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. 

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேமுதிகவை எப்படியாவது அதிமுக கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என பாஜக மேலிடம் விரும்புகிறது. இதற்காக டெல்லியில் இருந்தும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் சுதீஷிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

 

அதை தவிர்க்க முடியாத அதிமுக 5 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் தருவதாக ஒத்துக் கொண்டுள்ளது. இந்த முடிவுக்கு விஜயகாந்தும், பிரேமலதாவும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது, தற்போதுவரை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகளும், பாமகவுக்கு 7 தொகுதிகளும், புதுச்சேரி என்.ஆர். காங்கிரசுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அதிமுக வசம் 22 தொகுதிகள் மீதமுள்ளன. இதில் 1 தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கியது போக மீதம் உள்ள 21 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. சென்னையில் வருகிற 6-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து தங்களது பலத்தை காட்ட பாஜக முடிவு செய்துள்ளது. வரும் 3ம் தேதி கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. 

click me!