1 ஆம் தேதி வரைக்கும் இவர தொட முடியாது…. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தடை !!

 
Published : Jul 25, 2018, 10:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
1 ஆம் தேதி வரைக்கும் இவர தொட முடியாது…. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தடை !!

சுருக்கம்

INX media case delhi high court ban to arrest chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை  வரும் ஆகஸ்ட் தேதி வரை கைது செய்யக் கூடாது என அமலாக்கத் துறைக்கு  டெல்லி உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக  இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. . இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

ஏற்னவே  ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!