விரைவில் உட்கட்சி தேர்தல்.. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அவசர ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Jul 22, 2021, 10:25 AM IST
Highlights

விரைவில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்டதிட்டப்படி, அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், அதிமுகவில் தற்போது அந்த நடைமுறை இல்லை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் உட்கட்சி தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதிமுகவில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல், சர்வாதிகாரப் போக்குடன் கட்சித் தலைமையே நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் பதில் இல்லை. எனவே, அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் அதிமுகவில் உட்கட்சித் தேர்தல்வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.

click me!