சற்றும் எதிர்பாராத விஜயபாஸ்கர்.. திமுதிமுவென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ். பீதியில் மாஜிக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jul 22, 2021, 9:43 AM IST
Highlights

இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அடுத்தடுத்து தங்களுக்கும் இதே நிலை ஏற்படக்கூடும் என் கதிகலங்கிபோயுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம். ஆர் விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர்த்து போட்டியிட்டு அதில் தோல்வி அடைந்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டு, வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் வந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி ரெய்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிரடி சோதனையால் அதிமுக தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை பீதியில் உறைந்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள்  சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என மு.க ஸ்டாலின் கூறி வந்த நிலையில், தற்போது அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று இருப்பது ஒட்டுமொத்த அதிமுகவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அடுத்தடுத்து தங்களுக்கும் இதே நிலை ஏற்படக்கூடும் என் கதிகலங்கிபோயுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம். ஆர் விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர்த்து போட்டியிட்டு அதில் தோல்வி அடைந்தார். அமைச்சராக இருந்தபோது பல்வேறு முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாகவும், பல நிறுவனங்களுக்கு தவறான வழிகளில் அங்கீகாரம் வழங்கி, அதில் கோடிக்கணக்கான சொத்துக்களை லஞ்சமாக வாங்கிக் குவித்ததாகவும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த புகார்களை சேகரித்த அதற்கான ஆதாரங்களையும் திரட்டிய லஞ்ச ஒழிப்பு துறையினர் அதற்கான நேரம் பார்த்து காத்திருந்த நிலையில், அதிரடியாக இன்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனையில் இறங்கியுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் கிருபா குடியிருப்பில் வசிக்கும்  விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் மூன்று குழுக்கள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத எம்.ஆர் விஜயபாஸ்கர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனை நடைபெறும் நிலையில் அவர் சென்னையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கரூரில் உள்ள ஆண்டான்கோயில் பகுதியில் அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. கரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட அவரது வீடு, நிறுவனங்கள், மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என மொத்தம் 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றுவுடன் கொரோனாவை எதிர்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. எனது தற்போது தனது  ஆக்சனை திமுக ஆரம்பித்துவிட்டதாக பலரும்  கூறி வருகின்றனர். அடுத்தடுத்து பட்டியில் உள்ள சில முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் இதேபோல சோதனை நடத்த திட்டமிருப்பதாகவும் வெளியாகி வரும் தகவலால் மாஜி அமைச்சர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
 

click me!