தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.. மத்திய அரசு அனுப்பிய 2 லட்சம் டோஸ் மாவட்டவாரியாக பிரித்து அனுப்பிவைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 29, 2021, 10:09 AM IST
Highlights

தமிழகத்தில் படிப்படியாக கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் படிப்படியாக கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் இலவச தொகுப்பின் மூலம் நேற்று மாலை சென்னை வந்த 2,00,000 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகளை 45 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் பார்த்தால் சென்னைக்கு மட்டும் 20000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு , பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 39500 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 25000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 23500 கோவிஷூல்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை தேனி திண்டுக்கல் பழனி விருதுநகர் சிவகாசி மாவட்டங்களுக்கு 26500 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல நேற்று வந்த 2,00,000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்டம் வாரியாக தேவைக்கு எற்ப பிரித்து அனுப்பபட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் நேற்று  வந்த 2 லட்சம் தடுப்பூசிகளையும்  தற்போது மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.  
 

click me!