உளவுத்துறையின் ஷாக்கிங் ரிப்போர்ட்..! முதல்வர் ஸ்டாலினுக்கு மதவாதிகளால் ஆபத்து..!

By vinoth kumar  |  First Published May 5, 2022, 11:43 AM IST

முதல்வரின் பாதுகாப்பிற்கு மத அடிப்படை வாதிகளிடம் இருந்து அச்சறுத்தல் உள்ளது. அதேபோல் தமிழ் அடிப்படை பேரினவாதிகளிடம் இருந்தும், அதிருப்தியில் இருக்கும் சில நபர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மதவாதிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கொடுத்தத தகவலின் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மாநாடு

Tap to resize

Latest Videos

undefined

39-வது வணிகர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு வணிகர் சங்கங்களும் மாநாடு நடத்துகிறது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே 54 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக மாநாடு நடத்துகிறார். தமிழக வணிகர் விடியல் மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாடு இன்று காலை 8.30 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாநாட்டில் காலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி, மக்கள் இசை நிகழ்ச்சி, குத்து விளக்கு ஏற்றுதல், மாநாட்டு தலைமை உரை, மாநாட்டு தீர்மானங்கள், கலை நிகழ்ச்சிகள் என மாலை 4 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மதவாதிகளால் அச்சுறுத்தல் 

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் திருச்சி செல்கிறார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் 12.30 மணியளவில் மாநாட்டுக்கு சென்றடைகிறார். அங்கு அவரை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வரவேற்று கவுரவிக்கிறார். அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் முதுபெரும் வணிகர்களுக்கு வணிக விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அப்போது வணிகர்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவிப்பார் என தெரிகிறது. லுலு மார்க்கெட் ஒப்பந்தம் குறித்தும் விளக்கம் அளித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மதவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 கூடுதல் பாதுகாப்பு

இது தொடர்பாக திருச்சி காவல் ஆணையர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வரின் பாதுகாப்பிற்கு மத அடிப்படை வாதிகளிடம் இருந்து அச்சறுத்தல் உள்ளது. அதேபோல் தமிழ் அடிப்படை பேரினவாதிகளிடம் இருந்தும், அதிருப்தியில் இருக்கும் சில நபர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆகையால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

click me!