நியாய விலைக்கடைகளில் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து அறிக்கை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2021, 2:01 PM IST
Highlights

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு  மாதந்திர இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு  மாதந்திர இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் மாதத்திற்கு  10 நியாய விலைக்கடைகளில்  ஆய்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்கள் 20 கடைகளிலும் ஆய்வு செய்வதற்கான மாதந்திர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளின் வரவு செலவு விவரங்கள், பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வு குறித்த அறிக்கையை மாதந்தோறும் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 

click me!