இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 18, 2021, 1:48 PM IST
Highlights

 நீட் விலக்கு கோரும் தீர்மானங்களுக்கு அதிமுக அரசு போதிய அழுத்தம் தரவில்லை. அதிமுக அரசு போதிய அழுத்தம் தராததால் திருப்பி அனுப்பப்பட்டது தீர்மானங்கள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நீட் தேர்வுக்கான பயிற்சி தற்போது தொடங்கப்பட்டது போன்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுகிறார். அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது. அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டது.  நீட் விலக்கு கோரும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. நீட் விலக்கு கோரும் தீர்மானங்களுக்கு அதிமுக அரசு போதிய அழுத்தம் தரவில்லை. அதிமுக அரசு போதிய அழுத்தம் தராததால் திருப்பி அனுப்பப்பட்டது தீர்மானங்கள்.

அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி என குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு விலக்கு கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது. நுழைவுத்தேர்வு தொடர்பாக குழு அமைத்து திமுக அரசு ஆய்வு செய்து வருகிறது. குழுவின் அறிக்கையை தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிவிக்கையை ஏற்கவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி நீதிமன்றம் சென்று அதற்கான தடையாணையை பெற்றார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற அதிமுக அரசு போாடவில்லை. நீட் தேர்வு என்பது தற்போதுவரை நடைமுறையில் உள்ளது. அதனை ரத்து செய்ய திமுக முயற்சித்து வருகிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? மாணவ சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது யார்? என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

click me!