
எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற கோடிகளில் லஞ்சம் அளித்த வழக்கில் தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 2 வது நாளாக இன்றும் விசாரணை நடத்துகின்றனர்.
தினகரன் காவல்நிலையத்தில் ஆஜரானது முதல் விசாரணை முடிந்து வெளியேறியது வரை உள்ளே நடந்த விசயங்கள் தற்போது வெளியாகி உள்ளது. "NEWSFAST" தளத்திற்கு கிடைத்த அந்த தகவல்கள் உள்ளது உள்ளபடி அப்படியே பகிரப்படுகிறது.
நேற்று மாலை டெல்லி குற்றவியல் போலீஸ் முன்பு தினகரன் தன்னுடைய வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது தினகரன், இறுகிய மனநிலையில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அதிகாரி ஒருவர் ஏன் மன இறுக்கத்தில் இருக்கிறீர்கள்! எதாவது பிரச்சனையா என்று கேஷுவலாக கேட்டாராம். அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நீ்ங்கள் தினகரன்.
‘உங்களுடன் டெல்லியிலிருந்து பேசியவர்கள் யார்? யாரையெல்லாம் உங்களுக்கு இங்கு தெரியும் என்பதை விவரமாக சொல்லுங்கள் என்றார்களாம் காவல்துறையினர். ‘இங்கு எனக்கு ஏகப்பட்ட நபர்களைத் தெரியும். சிலருடன் அரசியல் ரீதியாக பேசுவதுண்டு. மற்றபடி அனைவரிடமும் எல்லா விஷயங்களையும் பேசுவதில்லை"
"என்னுடன் ராம்விலாஸ் பஸ்வான் மகன் பேசினார். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தினேன். என் மாமா மகன் மகாதேவன் மரணத்துக்குச் சென்றபோது காரிலேயே இந்த உரையாடல் நடைபெற்றது’ என்றவர் உடனடியாக அவர் செல்போனை எடுத்து அந்த எண்ணையும் காட்டிவிட்டு, ‘வேறு யாரும் என்னிடம் பேசவில்லை. என்றாராம்.
அடுத்ததாக சட்டத்துறை செயலாளரின் உதவியாளர் என்று ஒருவர் என்னிடம் பேசினார். பிரதமர் உங்கள்மீது நல்ல அபிப்ராயத்தில் உள்ளார். வழக்கு உங்களுக்கு சாதகாமகவே உள்ளதாகக் கூறினார். வேறேதும் நான் பேசவில்லை. மற்றபடி என்னுடைய கட்சிக்காரர்கள் சிலரிடம் பேசியுள்ளேன்’ என்று தெரிவித்தாராம்.
கடைசிவரை இதே பதிலை தினகரன் சொன்னதும், கடுப்பான அதிகாரி ஒருவர் தினகரன் பேசிய தொலைபேசி எண்கள் அடங்கிய காகித்தை மேஜையின் மீது தூக்கிப் போட டிடிவின் முகத்தில் எந்த பதற்றமும் இல்லையாம்.
இவ்வளவு விவரங்கள் தெரிந்த உங்களுக்கு இந்த எண்கள் யாருடையது என்று தெரியாமால் இருந்திருக்குமா? அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஏன் மறுபடியும் கேட்கிறீர்கள்? என்று கேஷூவலாக கூறியுள்ளார்.
அந்தப் பட்டியலிலுள்ள எண்களை வைத்து தினகரனிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் விசாரணை செய்தவர்கள், அடுத்த கட்டமாக தினகரனின் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கோப்புகள், அதை கொண்டுவந்தவர்கள், அந்தக் கோப்பில் இடம்பெற்ற பல்வேறு அமைச்சர்கள் குறித்தும் கேள்வியை எழுப்பி கேட்டுக்கொண்டே சென்றனர்.
எதற்கும் அசராத தினகரன் நீங்க எப்படி கேட்டாலும் என்னுடைய பதில் ஒன்னு தான். 'சோ டைம் வேஸ்ட் பன்னாதீங்க' என்றாராம்.
அசடிக்கும் 350 கேள்விகளுக்கும் ‘நோ’, ‘நாட் பாசிபிள்’ என்றே பதில் சொல்லியிருக்கிறார். சில கேள்விகளுக்கு மட்டும் விவரமாக, பொறுமையாக ஆங்கிலத்தில் பதிலை சொல்லியவர்... ‘எப்போது விசாரணை முடியும்? இன்னும் இருக்கிறதா?’ என்று கேட்டவரிடம் ‘தங்களுக்கு வேண்டிய பதிலைத் தரும்வரை விசாரணை நடக்கும்’ என்று காட்டமாகப் பதில் வந்திருக்கிறது.
எனக்கு தெரிந்தவற்றை அப்படியே சொல்லி விட்டேன். இனிமேல் என்ன இருக்கிறது? உங்களுக்கு திருப்தி தரும் வரை நானும் பதில் சொல்ல தயார்’ என்று தினகரன் சொல்லிகொண்டு இருந்த நேரத்தில் மீண்டும் விசாரனையை மறுநாள் ஒத்தி வைத்துள்ளது டெல்லி போலீஸ்.
தினகரனுடன் சென்ற அவரது உதவியாளர் ஜனார்த்தனன், அவரது நண்பர் மல்லிகாஜுர்னா ஆகியோரிடமும் 1 1/2 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
அவர்களிடம் ‘தினகரனின் தினசரி வேலைகள், கடந்த 1 மாத காலமாக யாரெல்லாம் தினகரனைச் சந்தித்தனர். தினகரனுடன் எப்போதெல்லாம் நீங்கள் பயணம் செய்தீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளால் திக்குமுக்காடினார்.
இதனைத்தொடர்ந்து இன்றும் விசாரணை நடக்கும் நிலையில், தினகரன் திரும்பி தமிழகம் வருவாரா? அல்லது டெல்லியிலேயே கைது செய்ய திட்டமோ? என இன்னும் மேலிடம் முடிவு செய்யவில்லையாம். இதே போல ‘தினகரனை எனக்கு யாரென்றே தெரியாது. அவரிடம் நான் எதுவும் பேசியதில்லை. இது பொய்யான வழக்கு’ என்று சுகேஷ் சந்திரா டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.