
ஏப்ரல் 25 ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
விவசாயிகளின் பிரச்சனைக்காக திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போரட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக இயக்கங்களும் பங்கேற்க உள்ளன.
வணிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள், என பல்வேறு தரப்பினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரவித்துள்ளது.
இந்தச் சூழலில் திருவாரூரில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக திராவிட முன்னேற்க கழகம் அறிவித்துள்ளது.