நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்… கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது நடந்த விபரீதம் …

First Published Aug 10, 2018, 1:53 AM IST
Highlights

நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்… கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது நடந்த விபரீதம் …

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

இதையடுத்து கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லம், சிஐடி நகர் இல்லம் மற்றும் ராஜாஜி ஹால் போன்ற இடங்களில் கருணாநிதியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

 பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தேவ கவுடா உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் தொண்டர்களும் கருணாநிதியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 பின்னர் கருணாநிதியின் உடல், அறிஞர் அண்ணா நினைவரங்க வளாகத்திலேயே அரசு மரியாதையுடன்  அடக்கம்  செய்யப்பட்டது.

கருணாநிதியின்  உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். அப்போது சிலர் சுவர் ஏறி குதித்து அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளே வர முற்பட்டனர்.

இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி  4  பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாணமடைந்தது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களை திமுக செய்ல தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். காயமடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் உதவித் தொகையையும் ஸ்டாலின் வழங்கினார்

click me!